பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய கோட்பாட்டு பிரதி ரூ.96 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
இயற்பியலில் பல சாதனைகள் புரிந்த விஞ்ஞானிகளில் முக்கியமானவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவரது சார்பியல் கோட்பாடு இப்போதும் இயற்பியலில் ஒரு மைல்கல்லாக உள்ளது. ஐன்ஸ்டீன் மற்றும் அவரது நண்பர் பெஸ்ஸோவும் இணைந்து இந்த சார்பியல் கோட்பாட்டை 1913 முதல் 1914ம் ஆண்டிற்குள் எழுதினர்.
இந்நிலையில் ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய சார்பியல் கோட்பாடு பாரிஸில் ஏலத்திற்கு விடப்பட்டது. பலரும் முண்டியடித்துக் கொண்டு ஏலத்தில் போட்டியிட்ட நிலையில் கடைசியாக அந்த கையெழுத்து பிரதி 13 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.96 கோடி) ஏலம் போனது.