Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துருக்கியின் பண மதிப்பில் பெரும் சரிவு: டிரம்ப்பே காரணம்!

துருக்கியின் பண மதிப்பில் பெரும் சரிவு: டிரம்ப்பே காரணம்!
, சனி, 11 ஆகஸ்ட் 2018 (13:50 IST)
துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கான வரிவிதிப்பை அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார். இதனால் துருக்கியின் பணமதிப்பான லிராவின் மதிப்பில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
துருக்கியின் பணமானது அமெரிக்காவின் ஸ்திரமான டாலர் மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் துருக்கி இடையேயான உறவில் சுமூக நிலை இல்லை என ஒரு ட்வீட்டில் தெரிவித்தார் அதிபர் ட்ரம்ப்.
 
அயல்நாட்டு சக்திகள் தலைமையிலான பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே லிராவின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என துருக்கி அதிபர் ரிஸீப் தயீப் எர்துவான் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் வரி உயர்வு முடிவுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என துருக்கி எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவு இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும் என்பதை அந்நாடு தெரிந்துகொள்ள வேண்டும் என துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சககம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
 
சில மணி நேரம் முன்பு தொழில்துறை அமைச்சகம் இணக்கமான போக்கை கடைப்பிடித்தது. அமெரிக்கா இன்னமும் தொழில்துறையில் கூட்டாளியாக இருப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய தினம் துருக்கியின் லிரா மதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணா அறிவாலயத்தில் திடீர் ஆலோசனை கூட்டம். ஸ்டாலின் பங்கேற்பு