Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்தில் பொருளாதார நெருக்கடி : 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்ய திட்டம்!

liz truss
, செவ்வாய், 11 அக்டோபர் 2022 (22:11 IST)
இங்கிலாந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் 2 லட்சம் பேரை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை அடுத்து, இங்கிலாந்து நாட்டிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் புதிதாகப் பிரதமரான லிஸ் டிரஸ், தம் அரசாங்கத்தின் 2 லட்சம் அரசு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, விரைவில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 5 பில்லியன் பவுண்ட் சேமிக்க முடியும் என இங்கிலாந்து அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு சுமார் 1 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும், மற்ற ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படமாட்டாது என்ற தகவலும் வெளியாகிறது.

இதனால், அங்குள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷியா ஒரு பயங்கரவாத நாடு....உக்ரைன் கடும் விமர்சனம்