Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷம் வைத்து எல்லையில் கொல்லப்பட்ட கழுகுகள்!! காரணம் என்ன?

Webdunia
சனி, 11 மே 2019 (14:34 IST)
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் எட்டு கழுகுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இது அந்த பகுதியிலுள்ள மொத்த கழுகுகளின் எண்ணிக்கையில் பாதி என்றும் தெரியவந்துள்ளது. கிரிஃபான் எனும் வகையை சேர்ந்த இந்த கழுகுகள், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலின் இயற்கை மற்றும் பூங்காக்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
எந்த விதமான விஷம் கொடுத்து, எப்படி கழுகுகள் கொல்லப்பட்டன என்பது குறித்தும், இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், விஷம் கொடுக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த மேலும் இரண்டு கழுகுகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.. பெரம்பலூர் மக்களுக்கு விஜய் கொடுத்த உறுதிமொழி..!

விஜய் குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

நீட் விலக்கு வாக்குறுதியை இப்போதைக்கு நிறைவேற்ற முடியவில்லை: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் ரேபிஸ் நோய் தாக்கி ஒருவர் உயிரிழப்பு: நாய் ஆர்வலர்களால் இன்னும் எத்தனை பலி?

மீன்பிடிக்க சென்ற இளைஞரை கடித்துக் குதறிய முதலை! - திருவண்ணாமலையில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments