கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார் கோவிலை அடுத்த அய்யனார் கோயில் தெருவில் வசித்து வந்தவர் தமிழ்ச்செல்வன்(35) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கயல்விழி(30) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு சிவதாரணி என்ற பெண் குழந்தை (3)இருந்தது.
இந்நிலையில் சிவதாரணியை பள்ளியில் சேர்ப்பது குறித்து கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கயல்விழி கணவரிடம் நமக்குப் பெரிதாக வருமானம் எதுவும் இல்லை. எனவே உங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்று குழந்தை விரும்புகின்ற பள்ளியில் படிக்கவைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதுசம்பந்தமாக இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு எழுந்துள்ளது.இதனால் கோபமடைந்த கயல்விழி நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் வீட்டில் கணவர் இல்லாத போது தன் குழந்தைக்கு மருந்தை பாலில் கலந்துகொடுத்துள்ளார்.
இந்நிலையில் இருவரும் மயங்கிக் கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கும்பலாகக் கூடிவிட்டனர்.பின்பு உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் வண்டியில் கொண்டு செல்லும் வழியிலேயே சிவதாரணி உயிரிழந்தார். தற்போது ஆபத்தான் நிலையில் கயல்விழி சிகிச்சை பெற்று வருகிறார்..
தற்போது போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.