Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தந்தை தொல்லை : இந்தியாவிற்கு தப்பி வந்த துபாய் இளவரசி

Advertiesment
தந்தை தொல்லை : இந்தியாவிற்கு தப்பி வந்த துபாய் இளவரசி
, வெள்ளி, 30 மார்ச் 2018 (17:07 IST)
துபாய் நாட்டு இளவரசி இந்தியாவிற்கு கடல் வழியாக தப்பி வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
துபாய் பிரதமர் சேக் முகமது பின் ரசீது அல் மக்தூமின் மகளும், துபாய் நாட்டின் இளவரசியுமான சேகா லத்தீபா மலை ஏறுவது, குதிரையேற்றம், செயற்கை இறக்கையை கட்டிக்கொண்டு வானில் பறப்பது போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வமுடையவர். ஆனாலும், அவரை அவரின் தந்தை கட்டுப்படுத்தியுள்ளார்.
 
சுதந்திரமாய் வாழ விரும்பிய சேகாவிற்கு இது பிடிக்கவில்லை. எனவே, துபாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அவர் முடிவு செய்தார். அதற்கு இந்தியாவை தேர்வு செய்த இளவரசி சேகா, கடந்த 4ம்தேதி தனது நண்பர் ஒருவருடன் ஒரு படகில் ஏறி கடல் வழியாக இந்திய கடல் பகுதியில் நுழைந்துவிட்டார். ஆனாலும், படகில் வந்த 4 பேரிடம் அவர்கள் சிக்கினர்.  
 
இதை மோப்பம் பிடித்த இந்திய கடலோரக் காவல்படை அவரை கோவா அருகே மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் அவர்கள் இருவரையும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடல் வழியாக வந்த அவரை மர்ம நபர்கள் 4 பேர் கடத்தி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
காரை ஓட்ட அனுமதிக்கவில்லை என்பதாலும், தன்னை வீட்டிலேயே அடைத்து வைத்து கண்காணித்ததாலும் தனது 16வது வயதிலேயே வீட்டை விட்டு சேகா தப்பிக்க முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரிக்காக உண்ணாவிரதம், கடையடைப்பு: தனித்தனியாக போராடும் அமைப்புகள்