வியட்நாம் நாட்டில் மறுவாழ்வு நாட்டில் இருந்து போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த 100 பேர் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகிறது.
வியட்நாம் நாட்டில் போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தில் இருந்து மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காக அரசு சார்பில் மறுவாழ்வு மையங்கள் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த மறுவாழ்வு மையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இந்த மையங்களில் சிகிச்சை பெற்று வந்த போதைக்கு அடிமையானவர்கள் தப்பியோடியதாக தகவல் வெளியாகிறது.
குறிப்பாக, மேகாங் டெல்டா என்ற பகுதியில் உள்ள மறுவாழ்வு மையத்தில், கடந்த சனிக்கிழமை இரவில் சிகிச்சைபெற்று வந்த நபர்களுக்குள் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து 190 பேர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அங்குள்ள அறைக்கதவுகளை உடைத்துக்கொண்டு வெளியேறிய அவர்கள், வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகிறது.
இதில், 94 பேரை கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மீதம் 100 பேரை போலீஸார் மற்றும் குடும்பத்தினர் தேடி வருவதாக தகவல் வெளியாகிறது.