Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

Mahendran
வெள்ளி, 23 மே 2025 (11:09 IST)
உக்ரைன் – ரஷியா இடையிலான போர் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், மாஸ்கோ நகரை உக்ரைன் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் விமான போக்குவரத்து பல மணி நேரங்கள் பாதிக்கப்பட்டது.
 
இந்த தாக்குதலில் மாஸ்கோ உள்ளிட்ட 10 மாகாணங்களை நோக்கி 105 ட்ரோன்கள் அனுப்பப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலான ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றாலும், விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேவைகள் நிறுத்தப்பட்டன.
 
இந்த நெருக்கடியான சூழலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பி கனிமொழி தலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ விவகாரம் குறித்து உரையாட ரஷியாவுக்குச் சென்றிருந்தனர். இவர்களும் சென்ற விமானம் சில மணி நேரம் வானத்தில் சுழன்று தாமதமாக தரையிறங்கியது.
 
விமானம் பத்திரமாக தரையிறங்கியதும், இந்திய தூதரகத்தினர் எம்பிக்களை வரவேற்று பாதுகாப்பாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். இக்குழுவினர் இன்று ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளனர்.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments