Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள டிரம்ப் - மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள டிரம்ப் - மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி
, சனி, 22 ஏப்ரல் 2017 (18:38 IST)
அமெரிக்க ஜனாதிபதி டிரப்ம் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என உளவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அமெரிக்காவில் உள்ள பிரபல உளவியல் மருத்துவர்கள் குழு நேற்று யேல் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர். அதில் பேசிய மருத்துவர் ஜான் கார்னர் கூறிய செய்தி அங்கிருந்த மக்களை அதிர்ச்சி அடைய செய்தது.
 
அவர் பேசும் போது “ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல், டிரம்பின் நடவடிக்கைகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் ஆபத்தான மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. இந்த நிலையில் அவர் அமெரிக்காவை தலைமையேற்று நடத்துவது ஆபத்தான ஒன்றாகும். அவரின் நடவடிக்கை அமெரிக்காவை மட்டுமல்ல.. உலக நாடுகளையும் பெருமளவில் பாதிக்கும். அவரின் செயல்பாடுகள் பற்றி அமெரிக்க மக்களுக்கு தெரியப்படுத்துவது எங்களின் கடமை” என அவர் பேசியுள்ளார்.
 
ஒரு உளவியல் மருத்துவர், டிரம்பை மனநோயாளி எனக் கூறியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மந்திர சக்தி சொல்லுச்சாம் கைக்குழந்தையை கொல்ல: தாய் செய்த கொடூர செயல்!