Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

Siva
ஞாயிறு, 15 ஜூன் 2025 (11:35 IST)
இந்தியாவில் பொதுவாக சரக்கு ஏற்றி செல்லவும், செங்கல் சூளைகளிலும் பயன்படுத்தப்படும் கழுதைகளுக்கு, பாகிஸ்தானில் தற்போது பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ.20,000 ஆக இருந்த ஒரு கழுதையின் விலை, இப்போது ரூ.3 லட்சமாக உயர்ந்துள்ளது!  
 
பாகிஸ்தானில் கழுதைகளின் விலை திடீரென அதிகரிக்க முக்கிய காரணம் சீனாதான். சீனாவில் கழுதைகளுக்கான தேவை அபரிமிதமாக அதிகரித்ததே இந்த விலையேற்றத்திற்குக் காரணம்.
 
சீனாவின் 'எஜியோ' (Ejiao) தொழிலுக்காக கழுதை தேவை அதிகரித்துள்ளது. 'எஜியோ' என்பது பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகையான ஜெலட்டின் ஆகும்.
 
கழுதையின் தோலை வேகவைத்து தயாரிக்கப்படும் இந்த ஜெலட்டின், சோர்வை போக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கட்டிகள் மற்றும் ரத்த சோகை போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவ கடைகளில் இந்த ஜெலட்டின் பெருமளவில் விற்பனை செய்யப்படுகிறது.
 
ஆச்சரியப்படும் விதமாக, கழுதைகளை அறுப்பது முதல் தோல் உரிப்பது வரையிலான பெரும்பாலான வேலைகள் பாகிஸ்தானிலேயே நடக்கின்றன. இதற்காக பலுசிஸ்தானில் ஒரு பெரிய கழுதை வதைக்கூடம் கூட திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments