Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அதிபர் ஆனால் ரஷியா- உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்தி விடுவேன்: டொனால்ட் டிரம்ப்

Mahendran
செவ்வாய், 2 ஜூலை 2024 (15:57 IST)
நான் அமெரிக்கா அதிபர் ஆனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்தி விடுவேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மீண்டும் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சார அரங்கம் ஒன்றில் அவர் பேசிய போது ரஷ்யர்கள் மற்றும் உக்ரைனியர்கள் தினமும் போரால் இறந்து கொண்டிருக்கின்றனர். நான் அதனை நிறுத்த விரும்புகிறேன்.
 
 நான் அதிபர் ஆனால் அதை 24 மணி நேரத்தில் நிறுத்தி விடுவேன் என்று கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மற்றும் ரஷ்யா அதிபர் புதின் ஆகிய இருவரையும் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்துவேன்  என்றும் இந்த சந்திப்பு மூலம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் நான் தற்போது அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இந்த போரையை அனுமதித்திருக்க மாட்டேன் என்றும் இந்த போர் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். டிரம்பின் இந்த பேச்சு அமெரிக்க மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிச்சடங்கு செய்த மறுநாள் உயிரோடு வீட்டுக்கு வந்த நபர்.. குஜராத்தில் ஒரு அதிசய சம்பவம்..!

ஆன்லைன் வகுப்பு தான்.. 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்ல வேண்டாம்: முதல்வர் உத்தரவு..!

பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்பு..!

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments