Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரம்ப் மருமகளுக்கு திடீர் மூச்சுத்திணறல்: ஆந்த்ராக்ஸ் பவுடர் காரணமா?

Advertiesment
வெள்ளை பவுடர் | வெனிஷா டொனால்டு டிரம்ப் ஜூனியர் | டொனால்டு டிரம்ப் ஜூனியர் | அமெரிக்க அதிபர் | white powder | Vanessa | New York | Donald Trump Jr
, செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (06:03 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகளுக்கு திடீரென இருமல், மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு பார்சலில் வந்த ஆந்த்ராக்ஸ் கிருமி காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியரின் மனைவி வெனிஷா. இவர்கள் அமெரிக்காவில் உள்ள மன்ஹட்டான் நகரில் வசித்து வருகின்றனர்.. இந்த நிலையில் நேற்று டிரம்ப் மருமகளுக்கு தபால் ஒன்று வந்துள்ளது. அதனை பிரித்து பார்த்த போது திடீரென்று அவருக்கு இருமல், மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது தாய் மற்றும் வீட்டு பணியாளர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டிரம்ப் மருமகள் உள்பட பாதிக்கப்பட்ட அனைவரும் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் ஜூனியர் டிரம்ப் என்ற பெயரில் வந்த கவரில் வெள்ளை நிற பவுடர் இருந்ததாகவும், அதனை சுவாசிக்கும் போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த கவரில் ஆந்த்ராக்ஸ் என்ற விஷம் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக நியூயார்க் போலீஸ் மற்றும் சீக்ரெட் உளவுத்துறை இணைந்து இது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிக்கன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்வதா? ராகுலுக்கு பாஜக கண்டனம்