விமானத்தில் பறப்பதற்கு சில நேரங்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கிய இந்தோனேசிய விமானத்தின் கருவிகளில் கோளாறு ஏற்பட்டிருந்ததாக பிபிசிக்கு கிடைத்த விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இயங்குமுறை குறித்த முதன்மை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
விமானத்தின் தொழில்நுட்பம் குறித்த அந்த தகவலில் கருவி ஒன்று "நம்பமுடியாத நிலையில்" இருப்பதாகவும், விமானி அதனை இணை விமானியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயிங் 737 மேக்ஸ் 8' வகையைச் சேர்ந்த அந்த விமானம் 189 பேருடன் கடலில் விழுந்தது. ஜகார்தாவிலிருந்து புறப்பட்டு விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் உயிர் பிழைத்திருக்கும் அறிகுறிகள் தெரியவில்லை.
விபத்துக்குள்ளான விமானம் குறைந்த விலை விமான சேவை வழங்கும் லயன் ஏர்-க்கு சொந்தமானது. விமான சேவை நிறுவனத்திடம் பிபிசியால் இந்த விபத்து குறித்து கருத்து பெற முடியவில்லை.