Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (22:05 IST)
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில். இந்தியக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு  நடத்த  4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  நாளை முதல்   சித்திரை  மாதம் பிரதோஷம் – அமாவாசை வழிபாட்டையொட்டி, பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே,  நாளை 19 ஆம் தேதி (பிரதோஷம்)செவ்வாய்க்கிழமை   , 19 ஆம் தேதி (அமாவாசை) வழிபாட்டை முன்னிட்டு,  4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்யலாம் என்றாலும், இதில், 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், மற்றும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும்தான் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டுசெல்ல அனுமதியில்லை என்றும்,  நீரோடையில் குளிக்கூடாது என்று வனத்துறை கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments