Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலில் விழுந்து கெஞ்சும் காதலன்: வைரலாக பரவும் காதல் முறிவு வீடியோ

காலில் விழுந்து கெஞ்சும் காதலன்: வைரலாக பரவும் காதல் முறிவு வீடியோ
, செவ்வாய், 24 மே 2016 (17:18 IST)
காதலன் ஒருவன் தன்னுடையை காதலியின் காலில் விழுந்து தன்னுடைய காதலை முறித்து விட்டு போகாதே என கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 
 
ரோட்டோரத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள சீனாவில் உள்ள ஹூவாய்ன் நகரில் காதலன் ஒருவன் காதலியின் காலில் விழுந்து கெஞ்சும் இந்த சம்பவம் நடந்துள்ளது. இணையத்தில் வைராலாகும் இந்த வீடியோவில் காதலி, காதலனை பல முறை கன்னத்தில் அறைந்து தனது காதலை முறித்து கொள்வதாக கூறுகிறார்.
 
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள காதலன் தரையில் படுத்து காதலியின் காலை பிடித்து கெஞ்சுகிறார். தனது காதலை முறித்துக் கொள்ளாதே என கெஞ்சும் காதலனை, என்னை விட்டு போய் விடு இது உனக்கு அவமானமாக இல்லையா காதலி கேட்கிறார்.

 

 
 
ஆனாலும் காதலன் அவரை விடாமல் காலை பிடித்து கொண்டு கெஞ்சுகிறார். ஆனால் காதலி கோபமான மனநிலையில் அவனை கன்னத்தில் அறைந்து உதறி தள்ளுகிறார். இந்த வீடியோ சீனா மற்றும் இந்திய சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவுடன் கூட்டு சேர்ந்த அதிமுக