உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத தங்கள் ஊழியர்களின் ஊதியத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. கொரோனா பாதித்த ஊழியர்களின் சிகிச்சைக்கு தலா 37 லட்சம் ரூபாய் செலவாகிறது என்பதால், இந்த அபராதம் விதிக்கப்படுவதாக அந்நிறுவனம் இப்படி ஒரு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.