Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒருநாள் பகல் பொழுது மூன்று மணி நேரம்தான்: எங்க தெரியுமா?

Advertiesment
ஒருநாள் பகல் பொழுது மூன்று மணி நேரம்தான்: எங்க தெரியுமா?
, சனி, 28 ஜனவரி 2017 (16:24 IST)
உலகிலேயே மிகவும் அதிகம் குளிரான பகுதி ரஷ்ய நாட்டில் உள்ள ஒய்மயகோன் என்ற பகுதியாகும். இங்கு டிசம்பர் மாதத்தில் ஒருநாள் பகல் பொழுது மூன்று மணி நேரம் தான்.


 

 
உலகிலேயே மிகவும் அதிகம் குளிரான பகுதி ரஷ்ய நாட்டில் உள்ள ஒய்மயகோன் என்ற பகுதியாகும். இந்த பகுதியில் டிகிரி எப்போதும் மைனஸில் தான் இருக்கும். அதிகபட்சமாக மைனஸ் 71.2 டிகிரி அளவில் குளிர் இருக்கும். இந்த பகுதியில் ஜூன், ஜூலை போன்ற மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது.
 
ஆனால் அப்போதும் மைனஸ் டிகிரியில் தான் இருக்கும். இந்த பகுதியின் கோடை காலங்களில் வெப்பநிலை மைனஸ் 30 டிகிரி அளவில் இருக்கும். இந்த ஒய்மயகோன் பகுதியில் டிசம்பர் மாதம் ஒருநாள் பகல் பொழுது மூன்று மணி நேரம் தான். கோடை காலங்களில் 21 மணி நேரமாக உள்ளது.
 
இந்த பகுதியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடும் குளிர் காரணாமாக எதுவும் விளையாது. ஆகையால் இவர்களது உணவு மான் இறைச்சியும், குதிரை இறைச்சியும். அந்த பகுதியில் ஒரு கடையும் உள்ளது.
 
இந்த பகுதி மக்களின் பிரதான தொழில் மீன் பிடிப்பதும், மிருகங்களை வேட்டையாடுவது தான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்கே கிடைக்காத மரியதை பன்னீர்செவத்துக்கு கிடைக்கிறது!