Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாவூத் இப்ராஹிம் ஒரே மகனுக்கு இந்த நிலைமையா?

Advertiesment
தாவூத் இப்ராஹிம் ஒரே மகனுக்கு இந்த நிலைமையா?
, ஞாயிறு, 26 நவம்பர் 2017 (12:19 IST)
நிழல் உலக தாதா மன்னன் என்று அழைக்கப்படும் தாவூத் இப்ராஹிம், மும்பை வெடிகுண்டு சம்பவம் உள்பட பல குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவன். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிம் தற்போது பாகிஸ்தானில் வசித்து வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தாவூத் இப்ராஹிமின் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு ஒரே வாரிசாக அவரது  ஒரே மகன் மொயின் நவாஸ் இருந்து வருகிறார். ஆனால் 31 வயதான மொயின் நவாஸ் திடீரென பாகிஸ்தான் மசூதி ஒன்றின் மதகுருவாக மாறிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் தாவூத் இப்ராஹிம் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை சமீபத்தில் மும்பையில் கைதான தாவூத்தின் தம்பி இக்பால் கஸ்கர், மும்பை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தாவூத் இப்ராஹிமின் மூன்று மகள்களில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். மீதி இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 மாணவிகள் தற்கொலை எதிரொலி: தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்