1500% ஏறிய பிட்காயின் மதிப்பு திடீரென குறைந்ததால் அதிர்ச்சி

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (06:32 IST)
இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படவில்லை என்றாலும் பிட்காயினில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் வருகிறது. 2017ஆம் ஆண்டில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 1500% உயர்ந்துள்ளதே இந்த வர்த்தகம் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் பிட்காயினில் செய்யப்படும் முதலீடுக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒரு பிட்காயினின் மதிப்பு 8,76,226 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிட்காயின் மதிப்பு நேற்று ஒரே நாளில் மட்டும் 15 புள்ளிகள் குறைந்துள்ளது. இதனால் பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வர்த்தகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதாலும்,  தென் கொரியாவின் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு இருந்த யூபிட் எக்ஸ்சேஞ்ச், திவாலாகி இருப்பதும் இந்த திடீர் இறக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில்  தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்ததால், தன்னை சரி செய்து கொள்வதற்கு இதுபோன்று இறங்குமுகம் அனைத்து வர்த்தகத்திலும் சகஜம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments