Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃப் உடலை 3 நாட்கள் தொங்கவிடவேண்டும்..நீதிமன்றம் தீர்ப்பு

Arun Prasath
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (10:21 IST)
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பே முஷாரஃப் இறந்துவிட்டால் பொது இடத்தில் 3 நாட்கள் தொங்கவிட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரஃப் கடந்த 2001 ஆம் ஆண்டு புரட்சி செய்து நவாஸ் ஷெரிஃபின் ஆட்சியை கைப்பற்றினார். பின்பு 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாவாஸ் ஷெரிஃப் மீண்டும் பிரதமரானார்.

அப்போது தனது ஆட்சியை புரட்சி மூலம் கைப்பற்றி, நெருக்கடி நிலையையும் கொண்டுவந்ததாக முஷாரஃப் மீது தேச துரோக வழக்கை பதிவு செய்தார். இதனிடையே விநோத நோய் காரணமாக முஷாரஃப் கடந்த 2016 ஆம் ஆண்டு துபாயில் சிகிச்சை பெற சென்றார். அதன் பின்பு அவர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.

முஷாரஃப் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம், கடந்த 17 ஆம் தேதி முஷாராஃப்க்கு தூக்கு தண்டனை விதித்தது. எனினும் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒரு நீதிபதி மாற்று கருத்தையும் தெரிவித்தார். பின்னர் இந்த தீர்ப்பு குறித்தான முழு விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று அமர்வுக்கு தலைமையேற்றுள்ள பெஷாவர் தலைமை நீதிபதி அகமத் சேத், தீர்ப்பின் முழு விவரத்தை வெளியிட்டார். அதில், ”குற்றச்சாட்டுகளின் படி முஷாரஃப் குற்றவாளி என நாங்கள் தெளிவாக உணர்ந்துள்ளோம், எனவே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு, அவரது கழுத்தில் தூக்கிட்டு இறக்கும் வரை தொங்கவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதில், ஒருவேளை தூக்கிலிடப்படும் முன்பே அவர் இறந்துவிட்டால், முஷாரஃபின் உடலை இஸ்லாமாபாத்தில் உள்ள டி-சவுக் பகுதிக்கு இழுத்துவந்து 3 நாட்களுக்கு தொங்கவிடவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments