Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரான் மந்திரியையும் தாக்கிய கொரோனா வைரஸ்: பரபரப்பு தகவல்

Advertiesment
ஈரான்
, செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (21:52 IST)
ஈரான் மந்திரியையும் தாக்கிய கொரோனா வைரஸ்
கடந்த சில நாட்களாக சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் உள்ள மக்களை பெரும் அச்சுறுத்தி வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்படோர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியாகி உள்ள நிலையில் தற்போது இந்த வைரஸ் சீனாவையும் தாண்டி அண்டை நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஈரானில் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் சற்று அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் ஈரான் நாட்டின் துணை சுகாதார மந்திரி துணை சுகாதார மந்திரியாக இருந்து வரும் அமைச்சர் இராஜ் ஹரீர்ச்சி என்பவரையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக இரவு பகலாக நடவடிக்கையை எடுத்து வந்த அமைச்சரையே அந்த வைரஸ் தாக்கியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் கொரோனா அவர்களுக்கு தற்போது  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
இந்த நிலையில் ஈரான் நாட்டின் வடக்கு பகுதியில் இன்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3 பேர் பலி இருப்பதாகவும் இவர்களையும் சேர்த்து இதுவரை ஈரானில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்றும் ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் கண்டதும் சுட உத்தரவா? காவல்துறை அதிகாரிகள் மறுப்பு