Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா தடுப்பூசி உருவாக்க 6 மாதங்கள் தேவைப்படுமாம்..!!

Advertiesment
கொரோனா தடுப்பூசி உருவாக்க 6 மாதங்கள் தேவைப்படுமாம்..!!

Arun Prasath

, புதன், 22 ஜனவரி 2020 (16:05 IST)
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் ரஷ்யாவில் பரவினால் தடுப்பூசியை கண்டுபிடிக்க 6 மாதங்களாகும் என ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோரானா வைரஸால் சீனாவில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஜப்பான், தைவான், தென் கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம் பரவியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் ரஷ்யாவில் பரவினால் அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும் என ரஷ்யாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும், மேலும் சோதனைக்கு 6 மாத காலம் தேவைப்படும் எனவும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணை இயக்குனர் ஷிபுலின் தெரிவித்துள்ளார்.

தங்களது நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற செய்தி குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முஸ்லிம்கள் மசூதிகளில் ஆயுதம் வைத்துள்ளனர்... பாஜக எம்.பி., சர்ச்சை பேச்சு !.