Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் கொரனா வைரஸ்.. மக்கள் பீதி

Arun Prasath
புதன், 29 ஜனவரி 2020 (17:25 IST)
சீனா, தைவான், தாய்லாந்து, தென் கொரியா, உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து தற்போது துபாயிலும் கொரனா வைரஸால் சீன குடும்பம் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாக அமீரக சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சீனாவில் பரவிவரும் கொரனா என்னும் ஆட்கொல்லி வைரஸால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தைவான், தென் கொரியா, தாய்லாந்து, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொரனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரனா வைரஸை தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சீனாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கொரனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரபு அமீரக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அக்குடும்பத்தினர் சீனாவின் வுகான் நகரிலிருந்து வந்துள்ளதாக
தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மருத்துவமனையில் தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments