Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரான்ஸில் 4வது அலை: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (13:14 IST)
பிரான்ஸில் 4வது அலை: அதிர்ச்சி தகவல்
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் இன்னும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையே முடிவுக்கு வராத நிலையில் மூன்றாவது அலை விரைவில் தோன்றும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் ஒருசில ஆப்பிரிக்க நாடுகள் உள்பட ஒருசில நாடுகளில் மூன்றாவது அலை தற்போது தோன்றி விட்டதாகவும் மிக வேகமாக மூன்றாவது அலை பரவி வருவதாகவும் குறிப்பாக 3வது அலையில் பரவி வரும் டெல்டா வைரஸ் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் நான்காவது அலை பரவி இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் மூன்றாவது அலை ஏற்கனவே முடிவுக்கு வந்து தற்போது நான்காவது அலை தொடங்கி இருப்பதாகவும் அந்நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை அந்நாட்டு அரசு செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
கொரோனா வைரஸின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது இப்போது மனித இனத்திற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இன்னும் கொரோனா வைரஸ் எத்தனை அலை தான் இருக்கும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments