சீனாவின் குறிப்பிட்ட 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்.
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகி உலகம் முழுவதும் பரவியது என்பதும் இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அது மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் கொரோனா வைரசால் பொருளாதாரம் சீரழிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் இயல்பு நிலை திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திடீரென கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆட்டம் கண்டு வருவதால் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சீனாவின் குறிப்பிட்ட 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.