உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ், சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ், 70 சதவீதம் அதிவேகமாக பரவக்கூடியது என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் 82 நாடுகளில் பரவியுள்ளன என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட மற்றொரு வகை கொரோனா பாதிப்பு 39 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளன. இதேபோன்று பிரேசில் நாட்டில் இருந்து கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு 9 நாடுகளில் பரவியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.