Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11.39 கோடியை கடந்த பாதிப்பு - உலக கொரோனா நிலவரம்!

11.39 கோடியை கடந்த பாதிப்பு - உலக கொரோனா நிலவரம்!
, சனி, 27 பிப்ரவரி 2021 (07:50 IST)
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.39 கோடியை கடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.39 கோடியைக் கடந்துள்ளது.
 
அதோடு, கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.95 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25.27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 
 
கொரோனா வைரஸ் பரவியவர்களில் 2.19 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செளதி அரசரிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன்: என்ன விவாதிக்கப்பட்டது?