Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேடையிலேயே இறந்த காமெடி நடிகர் – இதுவும் நடிப்பு என்று நினைத்த ரசிகர்கள்

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (19:27 IST)
இந்திய வம்சாவளியை சேர்ந்த மேடை நகைச்சுவை நடிகர் ஒருவர் நடித்துக் கொண்டிருக்கும்போதே இறந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபலமான காமெடி மேடை நடிகர் மஞ்சுநாத் நாயுடு. 36 வயதான இவர் பல்வேறு நாடுகளில் மேடைகளில் நகைச்சுவை நாடகங்களை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் அபுதாபியில் பிரம்மாண்டமாக இவரது நாடகம் நடைபெற்றது. அப்போது அதில் நன்றாக வசனம் பேசிக் கொண்டிருந்தவர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதால் தடுமாறி அருகில் உள்ள மேசையில் அமர்ந்திருக்கிறார். பிறகு நிலை தவறி தரையில் சரிந்து விழுந்திருக்கிறார். இந்த காட்சியை கண்ட பார்வையாளர்கள் இதுவும் நாடகத்தின் ஒரு பகுதி போல என நினைத்து கைத்தட்டியிருக்கிறார்கள்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. அப்போதுதான் அவர் நடித்துக் கொண்டிருக்கவில்லை என்பதை அவர்கள் உனர்ந்திருக்கிறார்கள். உடனடியாக மஞ்சுநாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஏற்கனவே அவர் இறந்திருந்தார். அதீத மன அழுத்தம் காரணமாக இதய வலி ஏற்பட்டு அவர் இறந்திருப்பதாக கூறப்படுகிறது.

தங்கள் விருப்பமான காமெடி மேடை நடிகர் தங்கள் முன்னாலேயே இறந்த சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments