Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாவின் பாதத்தை தொட்டு வணங்கிய வைகோ ! தொண்டர்கள் நெகிழ்ச்சி

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (19:25 IST)
பல ஆண்டுகளுக்கு பின்னர் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்திற்குச் சென்ற வைகோ, நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அண்ணா சிலையை பாதம் தொட்டு வணங்கினார்.
 
பின்ன, அதே வளாகத்தில் உள்ள காந்தி, அம்பேத்கார், காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் ,எம் ஜி ஆர் ,முரசொலிமாறன் ஆகியோரின் சிலைகளையும் அவர் வணங்கினார்.
 
இதனையடுத்து, பாஜக கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுமாமி, வைகோவைச் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து சுப்பிரமணிய சாமி தன் டுவிட்டர் பக்கதில் இதைப் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பல ஆண்டுகள் கழித்து இந்த, மாநிலங்களவைக்குச் செல்லும் வைகோ, இன்று அண்ணாவின் சிலையையின் பாதங்களைத் தொட்டு வணங்கியது மதிமுக தொண்டர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments