Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயிலேயே குத்துவார்கள்: ஈரான் ராணுவ கமாண்டோ காட்டம்!

Webdunia
புதன், 23 மே 2018 (12:04 IST)
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க விலகியது. இதனையடுத்து வரலாறு காணாத பொருளாதார தடைகள் ஈரான் மீது விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
அமெரிக்க அரசுத்துறை செயலர் பதவி என்பது நாடுகளின் அயலுறவு அமைச்சருக்கு இணையானது. இந்த பதவியில் இருக்கும் மைக் பாம்ப்பியோ ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்போம் என எச்சரித்தது. 
 
அவர் கூறியதாவது, ஈரான் தன் அணு நடவடிக்கைகளில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் செய்யவில்லையெனில், சிரியா போரிலிருந்து வெளியே வரவில்லையெனில் அமெரிக்கா புதிய தடைகளை விதிக்கும் என்று எச்சரித்தார்.
 
இதனையடுத்து ஈரான் ராணுவ கமாண்டர், ஈரான் மக்கள் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும். அமெரிக்க செயலர் பாம்ப்பியோவின் வாயிலேயே குத்த வேண்டும். அவரை ஆதரிப்பவர்கள் வாயிலும் குத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 
 
மேலும், வரலாற்றை உற்று நோக்கினால் ஹிரோஷிமா, நாகசாகியை அணுகுண்டு வீசி தாக்கிய அமெரிக்காதான் உலகின் நம்பர் 1 கிரிமினல் என்றும் காட்டமாக அமெரிக்காவை தாக்கி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments