கிறிஸ்துமஸ் அன்னதானம்; பசியில் முண்டியடித்து சென்றதால் 67 பேர் பலி! - நைஜீரியாவில் சோகம்!

Prasanth Karthick
செவ்வாய், 24 டிசம்பர் 2024 (09:52 IST)

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நைஜீரியா நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வழங்கப்பட்ட அன்னதானத்தை வாங்க மக்கள் முண்டியடித்து சென்றதால் கூட்டத்தில் சிக்கி பலர் பலியாகினர்.

 

 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா அதிகளவில் வறண்ட பிரதேசமாக இருப்பதோடு, கடும் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கி தவித்து வருகிறது. அங்கு மக்கள் பலர் தினசரி ஒருவேளை உணவுக்கே திண்டாடும் நிலை உள்ளது. 

 

இந்நிலையில் அந்நாட்டின் அனம்ப்ரா மாகாணத்தின் ஒகிஜா நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அன்னதானம் நடத்த தன்னார்வல அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. பசி, பட்டினியால் தவித்த மக்கள் உணவு வாங்குவதற்காக முண்டியடித்து ஓடியதில் கூட்டத்தில் சிக்கி 32 பேர் நசுங்கி பலியாகியுள்ளனர்.

 

இதேபோல அபுஜாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் அதை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்ததில் நெரிசலில் சிக்கி சிறுவர்கள் உட்பட 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவங்கள் நைஜீரியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments