ஐரோப்பாவில் நடைபெற்று வரும் சாக்லெட் திருவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் சாக்லெட் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் பெல்ஜியம் நகரில் சாக்லெட் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த விழாவில் 40க்கும் மேற்பட்ட சிற்ப கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட சாக்லெட்டால் செய்யப்பட்ட விலங்குகளில் சிலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
சாக்லெட்டால் ஆன மிருகங்களின் உருவ சிலை பார்ப்பதற்கு தத்ரூபமாய் காணப்பட்டது. யானை, குரங்கு, முயல் உள்ளிட்ட சாக்லெட் சிலைகளை 30 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்த திருவிழாவிற்கு இன்னும் பல லட்சம் மக்கள் வர வாய்ப்பிருப்பதாக விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.