Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ராணுவத்தை சீண்டிப் பார்க்கும் சீனா - அதிர்ச்சி வீடியோ

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (17:08 IST)
அருணாச்சல பிரதேசத்தில் அத்து மீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்கள் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


 

 
இந்தியா - பூடான் எல்லைப் பகுதியில் டோக்லாம் பீடபூமியை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் அந்த பகுதியில் சாலை அமைக்கவும் முயற்சித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக சிக்கிம் மாநிலம் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.  
 
இந்நிலையில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் இந்திய ராணுவ வீரர்கள் தடுக்க முயற்சித்த போது இருதரப்பினருக்கு இடையே கைகலப்பானது. சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் புகுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. 
 
இந்நிலையில், கடந்த மே மாதம், அருணாச்சல பிரதேச எல்லையில், சீனா அடாவடியாக நுழைந்த சீன ராணுவ வீரர்கள் அங்கு அத்து மீறி நடந்து கொண்டனர். இந்திய எல்லையில் கற்களால் ஆன அரண்களை அமைத்து, அங்கு இந்திய வீரர்கள் பாதுகாப்பிற்கு நிற்கின்றனர். அங்கு வரும் சீன வீரர்கள் அந்த கற்களை அகற்ற முயல்கின்றனர். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 10 நிமிடத்திற்கு மேல் ஓடும் அந்த வீடியோ பதட்டத்தை உண்டாக்குகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments