Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய ராணுவத்தை அழிக்கும் சக்தி எங்களுக்கு உண்டு; கூவும் சீன பத்திரிக்கை

இந்திய ராணுவத்தை அழிக்கும் சக்தி எங்களுக்கு உண்டு; கூவும் சீன பத்திரிக்கை
, புதன், 5 ஜூலை 2017 (14:50 IST)
சிக்கிம் பகுதிக்குள் நுழைந்துள்ள இந்திய ராணுவ படைகளை அழிக்கும் சக்தி எங்கள் ராணுவத்திடம் உள்ளது சீன பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.


 

 
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லை பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததாக இந்திய ராணுவம் சில நாட்களுக்கு முன் குற்றம்சாட்டியது. இதற்கு மறுப்பு தெரிவித்த சீனா, இந்திய ராணுவ வீரர்கள் தான் எல்லை பகுதியை கடந்து ஊடுருவியதாக தெரிவித்தது. சீனா வெகு காலமாக சிக்கிம் பகுதியை கைப்பற்ற முயற்சித்து வருகிறது. 
 
இதைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்கள் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். சீன பத்திரிக்கைகள் தொடர்ந்து இந்தியாவின் செயல்களை கேலி செய்தும் விமர்சித்தும் வருகிறது. 
 
இந்நிலையில் சீன ராணுவத்திற்கு இந்திய ராணுவ படைகளை அழிக்கும் வல்லமை உள்ளது, சிக்கிமை விட்டு இந்திய படைகள் வெளியேற வேண்டும் இல்லையென்றால் விரட்டியடிப்போம் என சீன நாட்டு பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.500-க்கு 4ஜி VoLTE ஸ்மார்ட்போன்: அம்பானியின் ஜியோ அதிரடி!!