Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் செய்யுங்கள்.. இல்லையேல் வேலையில் இருந்து நீக்கப்படுவீர்கள்.. பிரபல நிறுவனம் அறிவிப்பு..!

Mahendran
சனி, 8 மார்ச் 2025 (12:47 IST)
சீனாவில் உள்ள பிரபல நிறுவனம் தங்கள் ஊழியர்களிடம், "திருமணம் செய்யுங்கள், இல்லையென்றால் வேலையில் இருந்து நீக்கப்படுவீர்கள்" என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள தனியார் நிறுவனம், வரும் மார்ச் மாதத்திற்குள்  பணிபுரியும் ஊழியர்கள் திருமணம் செய்யாவிட்டால், வேலையை விட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால், தங்களைப் பற்றிய விளக்கம் அளிக்கும் கடிதம் ஒன்றை நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு, ஊழியர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததால், இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டு உள்ளதாகவும், இந்த உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், உத்தரவு வாபஸ் பெறப்பட்ட போதிலும், நிறுவனத்தின் ஊழியர்கள் விரைவில் திருமணம் செய்ய ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் குழந்தை பிறப்பு வீதம் குறைந்து வருவதால், திருமணம் மற்றும் குழந்தை பெறுவதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் தலைமையில் நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

கோமாவில் இருந்த நபர் திடீரென எழுந்து நடந்ததால் டாக்டர்கள் அதிர்ச்சி..!

வினாத்தாள் கசிவு எதிரொலி: 12-ம் வகுப்பு ஆங்கிலம் தேர்வு ரத்து.. அதிரடி நடவடிக்கை..!

தி.மு.க.வை வெளிப்படையாக விமர்சித்து மகளிர் தின வாழ்த்து: விஜய் வீடியோ வைரல்..!

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் உள்பட 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments