Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமானத்தின் இஞ்ஜினில் நாணயத்தை வீசிய சீன பெண்!!

Advertiesment
விமானத்தின் இஞ்ஜினில் நாணயத்தை வீசிய சீன பெண்!!
, வியாழன், 29 ஜூன் 2017 (15:47 IST)
ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் மூடநம்பிக்கையின் காரணமாக விமான இஞ்ஜினில் நாணயங்களை வீசிய சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
விமான நிலையத்தில் 80 வயதான சீனப் பெண் ஒருவர் விமானத்தின் இஞ்ஜினை குறிவைத்து, சரமாரியாக நாணயங்களை வீசத்தொடங்கினார். 
 
அவர் 9 நாணயங்களை வீசினார். அவற்றில் ஒரு நாணயம் இஞ்ஜின்மீது விழுந்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
 
உடனே, விமானத்தில் இருந்த 150 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். விமானத்தின் இஞ்ஜின் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 
 
அந்தப் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நாணயங்களை வீசி பிரார்த்தனை செய்தால் பயணம் பத்திரமாக அமையும் என்ற மூட நம்பிக்கையில் செய்தேன் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிஎஸ்டியால் வர்த்தகர்களுக்கு என்ன லாபம்??