இந்தியா சீனா நாடுகளுக்கிடையே எல்லை பிரச்சனை காரணமாக போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் எல்லையில் இரு தரப்பினரும் ராணுவ பலத்தை அதிகரித்துள்ளனர்.
இந்தியா எல்லையில் உள்ள தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என சீனா மிரட்டி வருகிறது. மேலும், எல்லையில் போர் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சீன ராணுவம் இந்திய எல்லையை நோக்கி நகர்கிறது எனவும் கனரக போர் ஆயுதங்கள் திபெத் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது எனவும் சீன ராணுவ மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது.
சீன ராணுவம் வடக்கு திபெத்தின் குன்லுன் மலைப்பகுதியை நோக்கி செல்கிறது எனவும் தெரிகிறது. சீனாவின் இந்த நடவடிக்கை எல்லையில் மேலும் சர்ச்சையை உண்டாக்கும் என தெரிகிறது.