சீனாவில் 8 நாட்களில் கொரோனா வைரஸுக்கு மருத்துவம் பார்க்க தனி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதுவரை பலர் இந்த வைரஸால் இறந்துள்ள நிலையில் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு மருத்துவமனை ஒன்றை துரிதமாக கட்ட முடிவெடுத்தது.
சுமார் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை 6 நாட்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. திட்டமிட்டபடி பணி நடந்து முடிந்தால் வரும் பிப்.3 ஆம் தேதி மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. PreFabricated Building என்ற முறையில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கும் வந்துள்ளது.
இன்று முதல் இந்த மருத்துவமனையில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள் என சீன அரசு அறிவித்துள்ளது. சுமார் 7,000 தொழிலாளர்கள் அரும்பாடு பட்டு இந்த மருத்துவமனையை கட்டி முடித்துள்ளனர். 1,400 பணியாளர்களுடன் ஏராளமான மருத்துவர்களும் இந்த மருத்துவமனைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.