Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவுக்கு சீனா உளவியல் ரீதியான அச்சுறுத்தல்

இந்தியாவுக்கு சீனா உளவியல் ரீதியான அச்சுறுத்தல்
, வியாழன், 20 ஜூலை 2017 (12:17 IST)
டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களை பின்வாங்க செய்ய சீனா உளவியல் ரீதியிலான தொல்லைகள் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
டோக்லாம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சி செய்ததை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால் சீனா எல்லையில் தனது ராணுவத்தை குவித்தது. அதோடு சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் வர முயற்சித்தனர். இதனால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது.
 
இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டனர். சீனா, இந்தியா தனது படைகளை எல்லை பகுதியில் இருந்து பின்வாங்க வேண்டும்; இல்லையென்றால் மோசமான சூழலை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தது.
 
ஆனால் இந்தியா தனது படைகளை பின் வாங்கவில்லை. திபெத் பகுதியில் சீனா போர் பயிற்சியில் ஈடுப்பட்டதாக சீன ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் போர் பதற்றம் மேலும் கூடியது. தொடர்ந்து சீனா எல்லையை கைப்பற்ற இந்தியாவை பல வழிகளில் அச்சுறுத்தி வருகிறது. பாகிஸ்தான் அனுமதித்தால் காஷ்மீரில் சீன ராணுவம் நுழையும் என்று சீன ஊடகம் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் ஊடக செய்திகள் மூலம் உளவியல் ரீதியிலான தொல்லைகளை கொடுக்க சீனா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் சீனா இப்படி செய்வது இது ஒன்றும் புதிதல்ல. தொடர்ந்து பல காலமாக சீனா இதை தான் செய்து வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடற்கரையில் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: மயங்கிய நிலையில் விட்டு சென்ற வெறியன்!