சீனாவில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சீனா உண்மையை மூடி மறைத்தது தெரிய வந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி, மொத்த உலகத்தையே முடக்கியுள்ளது. லட்சக்கணக்கில் மக்கள் இறந்துள்ள நிலையில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், இத்தாலி, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வந்துள்ளன. இந்நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு சீனாவே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா பாதிப்பு 6,40,000 என தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த இந்த தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் 230 நகரங்களில் 100க்கும் அதிகமான தன்னார்வலர்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலேயே இந்த புள்ளிவிவரம் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இதை மறுப்பதற்கு சீனாவுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.