Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் ஜெயிச்சா என்ன.. அமெரிக்கான்னாலே ஆகாது! – அதிபருக்கு வாழ்த்து சொல்லாத நாடுகள்!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (08:31 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்ற நிலையில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் வாழ்த்து தெரிவிக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தலில் நடப்பு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தோற்கடித்து அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ள ஜோ பிடனுக்கு இந்தியா உட்பட உலகின் பல நாடுகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

ஆனால் சீனா, ரஷ்யா மற்றும் மெக்ஸிகோ உள்ளிட்ட சில நாடுகள் புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பேசியுள்ள சீன வெளியுறவு துறை அமைச்சர் “ஜோ பிடன் தான் வென்று விட்டதாக கூறி வருகிறார். எனினும் ட்ரம்ப் இதுகுறித்து மேல்முறையீடு செய்வதாகவும் தெரிகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்காத நிலையில் நாங்கள் எந்த வாழ்த்தும் தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

இதே நிலையில்தான் ரஷ்யா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments