Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கே டூப்ளிகெட்டா? சீனாவில் போலி இந்திய கொரோனா மருந்துகள்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (12:19 IST)
சீனாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய மருந்துகளின் பெயரில் போலி மருந்துகள் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் சீனாவில் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் பாதிப்புகள் பதிவாவதாக கூறப்படும் நிலையில் அந்த தகவல்களை சீன அரசு வெளியிட மறுத்து வருகிறது. தற்போதுவரை சீனாவில் சீன தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ஐரோப்பா, அமெரிக்காவிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளை வாங்க சீனா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து தயார் செய்யப்படும் பிரிமோவிர், பஞ்சிஸ்டா, மல்லுநெட் உள்ளிட்ட மருந்துகளை பயன்படுத்திக் கொள்ள இந்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியிருந்தாலும், அந்த மருந்துகளுக்கு சீனா அனுமதி வழங்கவில்லை. என்றபோதும் சீனாவில் பலர் ஆன்லைன் மூலமாக இந்த மருந்துகளை ஆர்டர் செய்து வருகின்றனர். இதை வாய்ப்பாக பயன்படுத்தி சீனாவில் சில மருந்து நிறுவனங்கள் அந்த மருந்துகளின் பெயரில் போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவில் புழக்கத்தில் உள்ள இந்திய பெயருடைய மருந்துகள் போலியானவை என்றும், அதை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்றும் சீன சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செவ்வாயில் மனித கால்கள் பட வேண்டிய நேரம்? நாசாவுக்கா? ஸ்பேஸ் எக்ஸ்க்கா? - டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

விருப்ப எண்களை ஏலம் விடுகிறது பிஎஸ்என்எல்.. ஏலம் விடும் தேதி அறிவிப்பு..!

பி.எஸ்.என்.எல்., சிம் இருந்தால் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோவில் இருந்தும் பேசலாம்.. புதிய வசதி..!

பரந்தூரை சுற்றி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி இருக்கிறோமா? ஜி ஸ்கொயர் விளக்கம்..!

அமெரிக்காவில் ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே.. அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments