ஆஸ்திரேலியா அருகே உள்ள தீவு ஒன்றை சீனா விலைக்கு வாங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
ஆஸ்திரேலியா அருகில் உள்ள கான்க்லிட் என்ற தீவின் சொந்தகாரர் ஸ்மித் என்பவர் இந்த தீவை ஆஸ்திரேலிய அரசுக்கு விற்க முயற்சி செய்ததாகவும் ஆனால் அவர் கூறிய விலையை கொடுக்க ஆஸ்திரேலியா அரசு தர தயாராக இல்லை என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் தங்களுடைய தீவு வழியாகத்தான் ஆஸ்திரேலியாவின் ரகசிய கேபிள்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த தீவை ஆஸ்திரேலியா வாங்கவில்லை என்றால் சீனாவுக்கு விற்றுவிடுவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
சீனா இந்த தீவை வாங்குவதற்காக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஆஸ்திரேலிய அரசு தெரிவித்த போது அந்த தீவை வாங்க ஆஸ்திரேலியா விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் சீனா வாங்காமல் இருப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஆஸ்திரேலியா ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார்