Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவும் தென்கொரியாவும் தடுப்பூசி கொடுக்க தயார் - மவுனம் சாதிக்கும் வடகொரியா!

Webdunia
திங்கள், 16 மே 2022 (10:24 IST)
வடகொரியாவுக்கு தேவைப்படும் தடுப்பூசி மருந்தை தர தயார் என்று சீனாவும் தென்கொரியாவும் விருப்பம் தெரிவித்துள்ளது. 

 
வட கொரியாவில் கடந்த வாரம் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்றும் அந்த ஒருவரும் பலியாகி விட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த வாரம் வடகொரியாவில் மொத்தம் எட்டு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சர்வாதிகாரியாக வட கொரியாவில் ஆட்சி நடத்திவரும் கிம்ஜ்ச்ச்ன், அந்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகுக்கு தெரியாமல் வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு என வடகொரியா அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது 3 நாட்களில் மட்டும் எட்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. வடகொரியா மக்களுக்கு இன்னும் தடுப்பூசி போடாத நிலையில் தடுப்பூசியை அங்குள்ள மக்களுக்கு உடனே போட வேண்டும் என உலக சுகாதார மையம் வலியுறுத்தி வருகிறது. 
 
ஒருபக்கம் தொற்று அதிகரித்தாலும் இதுவரை தடுப்பூசி பயன்பாடு குறித்து எந்த முடிவினையும் அதிபர் கிம் அரசு மேற்கொள்ளவில்லை. வடகொரியாவுக்கு தேவைப்படும் தடுப்பூசி மருந்தை தர தயார் என்று சீனாவும் தென்கொரியாவும் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மனிதாபிமான உதவிகளை வடகொரியா அரசு தற்போது வரை ஏற்றுக் கொள்ளாமல் மவுனம் சாதித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments