Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசால்டாக தம் அடிக்கும் சிம்பன்ஸி (வீடியோ)

Advertiesment
அசால்டாக தம் அடிக்கும் சிம்பன்ஸி (வீடியோ)
, சனி, 22 அக்டோபர் 2016 (14:00 IST)
வடகொரிய உயிரியல் பூங்காவில் 19 வயது சிம்பன்ஸியைப் பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

 
வடகொரிய தலைநகரில் இரண்டு ஆண்டுகளாக மறுசீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இங்குள்ள டால் என்ற சிம்பன்ஸி, புகைப்பிடிக்கிறது. 
 
சிகரெட்டை வாயில் வைத்து, லைட்டரின் உதவியால் பற்ற வைத்து, தொடர்ச்சியாகப் புகையை வெளிவிடுகிறது. லைட்டர் இல்லாவிட்டால், ஏற்கெனவே பிடிக்கப்பட்ட சிகரெட்டில் இருந்து, பற்ற வைத்துக்கொள்கிறது.
 
டால் சிகரெட் பிடிக்கும் அழகைப் பார்ப்பதற்காகவே கூட்டம் படையெடுக்கிறது. சிம்பன்ஸிக்கு சிகரெட் பழக்கத்தை ஏற்படுத்தியதற்காக விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். 
 
ஆனால் சிம்பன்ஸியின் பயிற்சியாளரோ, சிம்பன்ஸி புகையை உள்ளே இழுப்பதில்லை. அதனால் சிம்பன்ஸிக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை என்கிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ரஜினிகாந்த் சொல்வதைப்போல் கடவுள் ஜெயலலிதா கைவிட மாட்டார்’ - விஜயகுமார் மகிழ்ச்சி