Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து குகையில் இருந்து சிறுவர்கள் எப்படி மீட்கப்பட்டனர்? வைரல் வீடியோ!

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (16:26 IST)
தாய்லாந்து தாம் லூங் குகையில் 15 நாட்களாக சிக்கி தவித்து வந்த 12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோவை தாய்லாந்து அரசு வெளியிட்டுள்ளது.   
 
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுங் என்ற 10 கிமீ நீள குகை உள்ளது. கடந்த வாரம் 11 வயது முதல் 16 வயது வரை உடைய 12 சிறுவர்கள் கொண்ட கால்பந்து அணியை சேர்ந்தவர்கள் இந்தக் குகைக்கு சாகச பயணம் சென்றனர். இந்த சிறுவர்களுடன் சேர்ந்து அணியின் துணைப் பயிற்சியாளர் ஒருவரும் சென்றார். 
 
இவர்கள் அந்த குகைக்கு சென்ற போது திடீர் மழை பெய்து வெள்ளம் நீர் குகைக்குள் புகுந்தது. நீரும், சேறும் குகையை சூழ்ந்ததால் குகையைவிட்டு வெளியேற முடியாத சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இவர்களை மீட்க பல முயற்சிகள் செய்யப்பட்டு சிறுவர்கள் மீட்கப்பட்டனர். 
 
இந்நிலையில் சிறுவர்களை வீரர்கள் மீட்ட வீடியோவை தாய்லாந்து கடற்படை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ உங்களுக்காக...
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

ரகுபதி சட்டத்துறை அமைச்சரா; தி.மு.க., பேட்டை ரவுடியா? அண்ணாமலை

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

விண்ணில் செலுத்தப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்.. கவுண்ட் டவுன் தொடக்கம்..!

திருவனந்தபுரத்தில் இருந்து வந்த 8 லாரிகள்: மீண்டும் கேரளாவுக்கே செல்லும் மருத்துவக் கழிவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments