அமேசான் காட்டில் வாழும் அரியவகை உயிரினங்கள், பறவைகள், பூச்சியினங்கள் எல்லாம் காட்டுத்தீயில் அழிந்துவிட்டதாக தகவல் வெளியாகின. . இந்நிலையில் பொலிவியாவில் பரவும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் அந்நாட்டு அதிபர் களத்தில் இறங்கியுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
உலகில் நுரையீரல் என்றழைக்கப்படும் அமேசான் காடுகள் உலகின் மக்களுக்காக 20% ஆக்சிஜனை வழங்கிவருகிறது. ஆனால் சமீபத்தில் அங்கு தீ பிடித்தது. இந்நிலையில் அமேசான் காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ ஆயுதப் படைகளை அனுப்ப பிரேசில் அதிபர் போல் சாயர் போல்சனாரூ உத்தரவிட்டுள்ளார். அங்குள்ள இயற்கை வளங்கள் உள்ள பகுதிகள், பூர்வகுடிகள் வாழும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள காடுகள் ஆகிய இடங்களுக்கு படையினர் அனுப்பப்படுவர் என்று தெரிவித்தார்.
அமேசான் தீ கட்டுப்படுத்தப்படும் வரை பிரேசில் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமலாக்கப் போவதில்லை என்று பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் கூறியுள்ளன.
பிரேசிலில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படுவதை தடை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை பின்லாந்து கோரியுள்ளது.
காட்டுத் தீயை அணைக்க சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பிரேசிலின் பல்வேறு நகரங்களிலும் வெள்ளியன்று போராட்டம் நடத்தினர். இது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பொலிவியாவில் உள்ள அமேசான் காட்டில் 8 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியுள்ள காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.இதில் உலகமே கவலை அடையக்கூடிய ஒரு விஷயம் என்றால், காட்டுத் தீயில் எரிந்த பகுதிகள் எல்லாம் மீண்டும் வனச்சோலைகளாக உருவாக குறைந்தது 200 ஆண்டுகள் ஆகும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அமேசானின் காட்டுத்தீயானது பொலிவியாவின் பாராகுவே எல்லையை ஒட்டியதான சவான்னாவிலும் பரவிவருகிறது. பொலிவியாவில் எல்லைக்குட்பட்ட இந்த காட்டில் 10 லட்சம் ஹெக்டேர் எரிந்து நாசாமாகியுள்ளன.
தற்போது தீயைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவிடம் இருந்து சூப்பட் டேங்கர் போயிங்கர் என்ற விமானத்தை பொலிவியா குத்தகைக்கு எடுத்துள்ளது. 2ஆயிரம் தீயணைப்பு வீரர்களை இத்தீயை அணைக்கவைக்கும் முயற்சியில் அந்நாடு ஈடுபடுத்தியுள்ளது.
இதற்கிடையில் காட்டுத்தீ விவகாரம் உலகநாடுகளாலும் மிகுந்த அழுத்தம்தரும் நிலையில் ,பொலிவியா நாட்டு அதிபர் ஈவோ மெரேலஸ், தீயணைக்கும் பணிகளை ஹெலிகாப்டரில் சென்றபடி பார்த்தார். பின்னர் அவர் வனத்தில் இறங்கி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தக் புகைப்படக்காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.