Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போகிமான் கோ விளையாடி பெண்ணின் உயிரைப் பறித்த கார் டிரைவர்

Advertiesment
Car driver
, வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (17:45 IST)
செல்போனில் விளையாடும் போகிமான் என்ற விளையாட்டு தற்போது உலகமெங்கும் மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.  


 

 
வெளிநாடுகளில் ஏராளமானோர்,  தங்களின் வேலையை கூட ராஜினாமா செய்து இந்த கேமை விளையாடி வரும் அளவுக்கு இதற்கு அடிமையாகி உள்ளதாக அதிர்ச்சியான செய்திகள் சமீபத்தில் வெளியானது.
 
தற்போது அதைவிட அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. போகிமான் விளையாட்டு ஒரு பெண்ணின் உயிரை பறிப்பதில் போய் முடிந்துள்ளது.
 
ஜப்பான் மக்களிடையே இந்த விளையாட்டு ஏராளமானோர் விரும்பி விளையாடி வருகின்றனர். அங்குள்ள டோகுஷிமா நகரில் நேற்று 39 வயதுள்ள ஒருவர் காரை ஓட்டி சென்றுள்ளார். 
 
அப்போது, ஒரு கையால் காரை ஓட்டிக்கொண்டும், இன்னொரு கையில் செல்போனில் இந்த விளையாட்டை விளையாடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற இரு பெண்களின் மீது காரை மோதிவிட்டார்.
 
இதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பரிதாபமாக பலியானார். மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூமிக்கு அருகில் பூமியை போன்ற கிரகம்: நாசா தகவல்