Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேன்ஸ் திரைப்பட விழா.! சிறந்த நடிகைக்கான விருது பெற்றார் இந்திய நடிகை!

Senthil Velan
சனி, 25 மே 2024 (14:45 IST)
கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை இந்திய நடிகை அனசுயா சென்குப்தா வென்று சாதனை படைத்துள்ளார். 
 
கேன்ஸ் திரைப்பட விழா அதிகாரப்பூர்வ இணையதளம் கடந்த மே 25ஆம் தேதி விருது வென்றவர்களின் பட்டியலை வெளியிட்டது.  இந்த முறை கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படங்கள் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. அதிலும் 'Shameless' படத்தில் நடிகை அனசுயாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பல்கேரியா நாட்டை சேர்ந்த இயக்குநர் கொன்ஸ்டாண்டின் போஜனோவ் இயக்கிய 'Shameless' படத்தில் அனசுயா, ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
காவல் அதிகாரியை கொலை செய்து விட்டு டெல்லியில் உள்ள பாலியல் தொழில் செய்யும் இடத்தில் சிக்கிக் கொள்ளும் ரேணுகா, அங்கு தேவிகா என்ற பெண்ணால் ஈர்க்கப்படுகிறார். அதற்கு பின் இருவரும் சந்திக்கும் சவால்கள் பற்றி படமாக்கப்பட்டுள்ளது. 

கடந்த 77 வருடங்களாக நடந்து வரக்கூடிய கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்திய நடிகை ஒருவர் சிறந்த நடிகைக்கான விருது பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று சாதனைக்காக அனசுயாவுக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர். இந்த படத்திற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்று இந்திய சினிமாவிற்கு உலக அளவில் பெருமை சேர்த்துள்ளார். 

ALSO READ: கூகுள் மேப் பொய் சொல்லாது.! ஆற்றில் பாய்ந்த கார்.!
 
Shameless திரைப்படத்தோடு sunflowers were the first ones to know என்ற கன்னட குறும்படமும், bunnyhood ஆகிய படங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் la cinef selection என்ற திரைப்பட தரவரிசையில் முதல் மற்றும் மூன்றாவது இடங்களை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்