700 இந்திய மாணவர்களை கனடா அரசு நாடு கடத்த திட்டமிட்டுள்ள நிலையில் கனடா அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
கனடாவில் உயர் கல்வி படிக்கச் சென்ற 700 இந்திய மாணவர்கள் போலியான சேர்க்கை கடிதங்கள் மற்றும் ஆவணங்களை கொடுத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து போலி சேர்க்கை கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் கொடுத்த 700 இந்திய மாணவர்களை கனடா அரசு நாடு கடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த மத்திய அரசு கனடா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்காலிகமாக 700 இந்திய மாணவர்களை நாடு கடத்தும் திட்டத்தை கனடா அரசு கைவிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.